fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்தது இலங்கை..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2021 13:01

இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்தது இலங்கை..

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட 20 டுவண்டி கிரிக்கட் தொடரை 2 – 0 என இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. நேற்று கார்டிபில் இடம்பெற்ற 2வது 20 டுவண்டி போட்டியில் டக்வத்லூய்ஸ் முறை அடிப்படையில் 5 விக்கட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றது. குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், அணித்தலைவர் குசல் பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மார்க்வூட் மற்றும் ஆர்டில் ரஷீட் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். 112 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பதிலுக்கு துடுப்பெத்தாடிய போது 4 விக்கட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்த வேலையில் போட்டிக்கு மழையால் தடை ஏற்பட்டது. இதனால் போட்டி சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் போட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டபோது டக்வத் லூய்ஸ் முறை அடிப்படையில் 18 ஓவர்களில் 103 என்ற வெற்றியிலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து குறித்த இலக்கை இங்கிலாந்து அணி அடைந்தது. லியாம் லெவிங்ஸ்டன் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் சேம் பில்லிங்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக லியாம் லெவிங்ஸ்டன் தெரிவானார். இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி 20 டுவண்டி கிரிக்கட் போட்டி நாளை சவுத்ஹெம்டனில் இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2021 13:01

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க