செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. 2033ம் ஆண்டளவில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆளில்லாத விண்கலங்களை கொண்டே இதுவரை காலமும் செவ்வாய் கிரகம் தொடர்பில் சீனா ஆய்வுகளை முன்னெடுத்து வந்தது.
இந்நிலையில் சீனா முதற்தடவையாக விண்வெளி வீரர் குழுவை கொண்டதாக விண்கலம் ஒன்று செவ்வாய்க்கு அனுப்பப்படவுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் ரொபோ விண்கலம் ஒன்றை செவ்வாய்க்;கு அனுப்பவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.