ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் நேரடிப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரின் வட பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
படிக்க 0 நிமிடங்கள்