உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் 10 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. 5 மாவட்டங்களை சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய பதுளை வெலிமட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூலங்கபொல, கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டதொல கிராம சேவகர் பிரிவும், அபேதென்ன வத்தை பிரதான பகுதி மற்றும் க்லோ பகுதியும் முடக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் யாழ்பாணம் கரவெட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரனவாய் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவின் கொத்தகந்த கிராம சேவகர் பிரிவு நொரகொல்ல தோட்டத்தின் மேற் பிரிவு, பனாவெல்ல கிராம சேகவர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டம் ஒன்ற பகுதி, இலக்கம் 5 பகுதி உட்பட, கப்பூஹேன்தொட்ட கிராம சேவகர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டம் 5ம் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 233ம் தோட்டம் மற்றும் மஹாவத்தை வீதி கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளதபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார்.