fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேற்றைய தினம் நாட்டில் புதிதாக 2,093 தொற்றாளர்கள் அடையாளம்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2021 12:35

நேற்றைய தினம் நாட்டில் புதிதாக 2 ஆயிரத்து 93 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 22 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள். அத்துடன் கம்பஹா மாவட்டத்திலேயே கூடுதலாக 364 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொழும்பு மாவட்டத்தில் 322 பேரும், களுத்துறையில் 292 பேரும், கண்டியில் 190 பேரும், நுவரெலியாவில் 148 பேரும் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் மட்டக்களப்பில் 136 கொவி;ட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 43 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 296 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். எவ்வாறெனினும் மேலும் 31 ஆயிரத்து 913 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2021 12:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க