fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குமார் சங்ககாரவிற்கு ICCயிடம் இருந்து மற்றுமொரு கௌரவம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2021 12:31

குமார் சங்ககாரவிற்கு ICCயிடம் இருந்து மற்றுமொரு கௌரவம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தலைவருமான குமார் சங்ககாரவிற்கு ஐ.சி.சியிடம் இருந்து மற்றுமொரு கௌரவம் கிடைக்கப்பெற்றுள்ளது. hall of fame  பட்டியலில் சங்ககார பெயரிடப்பட்டுள்ளார். வர்ல்ட் டெஸ்ட் ச்செம்பியன் ஷிப் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ள நிலையில் ஐ.சி.சியினால் 10 வீரர்களை உள்ளடக்கிய சிறப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குமார் சங்ககார கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்றார்.

பட்டியலில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலத்துறை வீரர் மொன்டி நொபெல் தென்னாபிரிக்கா அணியின் ஒப்ரே பொக்னர் ஆகியோரும் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பொப் விலிஸ், என்டி பிளவர், வினோ மேன்கெட் ஆகியோர் குறித்த  பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். குமார சங்ககார hall of fame பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இரண்டாவது இலங்கையர் ஆவார். ஏற்கனவே இலங்கை அணியின் முன்னாள் சூழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் hall of fame  பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2021 12:31

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க