fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண டுவண்டி 20 தொடருக்கான மைதானம் குறித்து தொடர்ந்தும் ஆலோசனை..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2021 13:39

உலக கிண்ண டுவண்டி 20 தொடரை இலங்கையில் நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் இந்திய கிரிக்கட் அதிகாரிகள் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் கலந்துரையாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டுவண்டி 20 உலக கிண்ண தொடரை இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் நிலை காரணமாக அந்நாட்டில் போட்டியை நடத்துவதில் நிச்சியமற்ற தன்மை உருவாகியுள்ளது. போட்டியை ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தில் நடத்துவது தொடர்பிலும் மாற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் கொவிட் நிலையால் பிற்போடப்பட்ட ஐபிஎல் தொடரின் 2ம் கட்டம் ஐக்கிய அரபு எமீரகத்தில் நடத்தப்படவுள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டி ஒக்டோபர் 10ம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் உலக கிண்ண டுவண்டி 20 தொடர் ஒக்டோபர் 8ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக டுவண்டி 20 உலக கிண்ண தொடரை இலங்கையில் நடத்த முடியுமான என்பது தொடர்பில் இந்திய கிரிக்கட் சபை ஆராய்ந்து வருகின்றது. எவ்வாறெனினும் ஐசிசி குறித்த விடயத்தி;ற்கு விரைவில் இறுதி தீரமானத்தை எடுக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 9, 2021 13:39

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க