fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒப்பந்தமின்றி இங்கிலாந்துக்கு பயணிப்பதற்கு இலங்கை வீரர்கள் இணக்கம்..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2021 12:28

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒப்பந்தமின்றி இங்கிலாந்து சுற்றுபயணத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணியுடன் 3 20-டுவண்டி போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

தொடரின் பின்னர் வீரர்கள் நாடு திரும்பியதன் பின்னர் வீரர்களுக்கான மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒப்பந்தம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. இலங்கை அணி வீரர்களின் ஒப்பந்தம் குறித்து கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் இடையில் கருத்துமுரண்பாடுகள் காணப்பட்டன.

தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு விளையாடுவது விருப்பம் கொண்டுள்ள வீரர்கள் புதிய தொழினுட்ப குழுவின் மதிப்பீட்டு படிமுறைகள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். வீரர்களின் உடற்தகுதி மற்றும் செயற்திறனை அடிப்படையாகக்கொண்டே ஒப்பந்தத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தொழினுட்ப குழு குறிப்பிட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்போது வீரர்களின் செயற்திறன் 50 வீதம் கவனத்திற்கொள்ளப்படுவதோடு, உடற்தகுதி 20 வீதமும் ஏனைய விடயங்கள் 10 வீதமும் கவனத்தி;ற்கொள்ளப்பட்டு ஒப்பந்தத்திற்கான வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனூடாக வீரர்களின் தனிப்பட்ட ரீதியான செயற்திறனை கூடுதலாக எதிர்பார்க்க முடியும் என தொழினுட்ப குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இங்கிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் இன்று மாலை பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 8, 2021 12:28

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க