இம்மாத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு நாளை மறுதினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவானது உரிய ஓய்வூதியதாளரின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் அதனை பெற்றுக்கொள்வதற்கு ஓய்வூதியதாளர்கள் செல்லும்பட்சத்தில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முப்படையினரை ஈடுபடுத்தி போக்குவரத்து வசதிகள் ஒழுங்கமைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம் வங்கிகள் திறந்திருக்கும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.