வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவி பகுதியில் தனிமைப்படுத்தலுக்கானவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தலுக்காக கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச்செல்லும் வழியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை பனிக்கன் நீராவியருகில் வீதியொறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் பஸ் வண்டி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தினால் எவருக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.