நாட்டில் நேற்றைய தினம் 2 ஆயிரத்து 646 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை மொத்தமாக 2 இலட்சத்து 7 ஆயிரத்து 979 பேர் மொத்த தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 45 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் 30 ஆயிரத்து 145 பேர் வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களையடுத்து 47 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவை மே மாதம் 17ம் திகதி முதல் ஜூன் 7ம் திகதி வரை ஏற்பட்ட மரணங்கள் என சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட மரணங்களில் 26 ஆண்களும், 21 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதுவரை நாட்டில் ஆயிரத்து 789 மரணங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.