காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகள் காபன் உரத்தை பயன்படுத்திய விவசாய உற்பத்திகளுக்காக..
Related Articles
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளை காபன் உரத்தை பயன்படுத்திய விவசாய உற்பத்திகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
“காபன் உரத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்க காணி அமைச்சு என்ற அடிப்படையில் நாம் தீர்மானித்துள்ளோம். விவசாயிகளுக்கு காபன் உரத்;தை வழங்கும் போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட தீர்மானம் மிகவும் சிறப்பு வாய்ந்த தீர்மானமாகும். நான் வாழும் ரஜரட்ட் பகுதியில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் உள்ளனர். அதேபோன்று புற்றுநோய் மற்றும் அடையாளம் காணப்படாத நோய்களினால் பல் பீடிக்கப்பட்டுள்ளனர். காபன் உர பயன்பாட்டின் மூலம் சுகாதார செலவுகளை மீதப்படுத்தவும் முடியும். மக்களின் ஆயுளும் அதிகரிக்கும். இரசாயன உர பயன்பாட்டினால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட இனங்காணப்படாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து கழிவுகளை காபன் உரமாக இறக்குமதி செய்யப்போவதாக சிலர் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு பல பொய்கள் கூறப்படுகின்றன. அனைத்து இறக்குமதியும் முழுமையாக பரிசோதனையிடப்பட்டதன் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கபடும். ஒரு சில மாதங்களுக்கே காபன் உரம் இறக்குமதி செய்யப்படும். அதன் பின்னர் நாட்டிலேயே காபன் உரம் உற்பத்தி செய்யப்படும்.”