கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்குமான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான ஆலோசனைகள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி வழங்கப்படும் அதேவேளை, அவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாக இருந்தால் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும்.
வீடுகளை விட்டு வெளியேற முடியாத தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதி வழங்கப்படுகிறது.அதன் காரணமாக வீடுகளுக்கே சென்று நிவாரண பொதி பகிர்ந்தளிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.