fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தீச் சுவாலைகள் அணைந்த போதிலும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்ந்தும் எரிவதாக தகவல்..

ITN News Editor
By ITN News Editor மே 28, 2021 13:04

தீச் சுவாலைகள் அணைந்த போதிலும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்ந்தும் எரிவதாக தகவல்..

கொழும்பு துறைமுகத்திற்கு சமீபமான கடலில் தீப்பற்றிக்கொண்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ முற்றாக அணைக்கப்படவில்லையென சமுத்திரவியல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. தீ சுவாலைகள் மற்றும் புகை மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை தெரிவிக்கின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 20 ம் திகதி தீப்பற்றிக்கொண்டது. கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தூரத்தில் கப்பல் நங்கூடரமிடப்பட்டிருந்த நிலையில் தீப்பற்றிக்கொண்டது. 186 மீற்றர் நீளமும் 37 மீற்றர் அகலமும் கொண்ட இக்கப்பல் விபத்துக்குள்ளான போது 25 டொன் நைட்ரிக் அமிலம் இருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வேறுபல இரசாயன பதார்த்தங்களும் அடங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

ஆயிரத்து 486 கொள்கலன்கள் கப்பலில் இருந்துள்ளன. இவை முற்றாக தீயில் அழிந்துள்ளது. தீயை அணைப்பதற்கு கடற்படை விமானப்படை மற்றும் இந்திய படகுகளும் உதவியுள்ளன. இந்த கப்பல் நீரில் மூழ்கக்கூடிய நிலை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. கப்பல் கடலுக்கு இரையானால் அதனால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புக்களை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமுத்திரவியல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

அத்துடன் குறுகிய மற்றும் நீண்ட கால சுற்றாடல் அழிவுகள் இவ்விபத்தினால் ஏற்படக்கூடுமென்;றும் அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். இந்த கப்பலின் எரிபொருள் தாங்கியில் 325 மெற்றிக் டொன் எரிந்துள்ளது. அவை கசியக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும் இதுவரை எண்ணெய்க் கரைகளோ, எரிபொருள் கசிவு தொடர்பான தகவல்களோ தெரியவரவில்லையென அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இவ்விபத்தினைத் தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் ஊடாக கரையோரம் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. கரையொதுங்கியுள்ள இடிபாடுகளை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தின் 16 வது படைப்பிரிவு ஆரம்பித்துள்ளது. கப்பலில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்துடன் அங்கிருந்த கொள்கலன்கள் கடலில் கவிழ்ந்துள்ளதாகவும் அவை கரையொதுங்கியதைத் தொடர்ந்து அந்த இடிபாடுகளை சேகரிப்பதற்கு வந்த 8 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர்.

கப்பலில் உள்ள பொருட்களை சேகரிக்க வேண்டாமென மக்கள் அறிவுறுத்தப்பட்ட போதிலும் அதில் கரிசனை காட்டாமல் பொருட்களை சேகரிக்க முற்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள். பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினமும் அவ்வாறு செயற்படுவோரை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 28, 2021 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க