தீ பரவலுக்கு உள்ளன எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த கப்பலில் இருந்து 8 கொள்கலன்கள் கடலுக்குள் விழுந்துள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு துறை முகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயை அணைப்பதற்கு என தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கப்பலில் இருந்த பணியாளர்கள் 25 பேரை மீட்கும் பணிகளை கடற்படையினர் மேற்கொண்ட நிலையில், அதில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் இந்திய பிரஜைகள் என்பதோடு, அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைக எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு விமான படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரின் ஊடாக தீயை கட்டுப்படுத்தும் இரசாயனப்பொருள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.