fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்போது நிலவும் காலநிலைக்கு ஏற்ப வெளிநாட்டு பறவைகளின் வேடந்தாங்கல் பருவ காலம் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மே 21, 2021 15:08

கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் காலநிலைக்கு ஏற்ப வெளிநாட்டு பறவைகளின் வேடந்தாங்கல் பருவ காலம் ஆரம்பமாகியுள்ளது.

மட்டு மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் இவ் அழகிய பறவைகள் கூட்டம் கூட்டமா உலாவுவதை காணக்கூடியதாக உள்ளது. வெல்லாவெளி, பட்டிப்பலை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் இவை பல நிறங்களில் உணவு தேடுவதையும் ஓய்வெடுப்பதையும் , உலாவுதையும், கொஞ்சிக் குலாவுவதையும் காணக்கூடியதாக உள்ளது. மனிதன் கடந்த காலங்களில் சகல நற்காரியங்களுக்கு இயற்கை தெய்வத்தை வழிபட்டு தனது சுப காரியங்களை ஆரம்பித்தான். தற்போது நவீன உலகத்தில் அவை தொலைத்து விடப்பட்டதனால் இன்று கொத்;துக்கொத்தாக நாளாந்தம் கொரோனாவினால் உயிரிழக்கின்றன. எனினும் இயற்கை நேசிக்கும் பறவைகள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி இயற்கை வான்வெளியில் சுதந்திரமாக தமக்கு பொருத்தமான இடங்களில் தங்குவதற்கும் இவ் அழகிய பறவைகள் கூட்டம் கூட்டமாக உலாவுதை காணக்கூடியதாக உள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 21, 2021 15:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க