வங்காளவிரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் நாட்டின் காநிலையில் மாற்றங்கள் ஏற்படலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக திருகோணமலையிலிருந்து தொலைவிலுள்ள கடல் பகுதியில் காலநிலை சீரற்றதாக காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் பலத்த காற்றும் வீசலாமென அறிவிக்கப்படுகின்றது. வடமேற்கு கடலில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் சில மீனவர்கள் கவனயீனமாக கடற்றொழில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது. கற்பிட்டி முதல் வென்னப்புவ வரையிலான கரையோரப்பகுதிகளில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.