குறைவருமானம் பெறுவோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கென 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை கொண்ட பொதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலி கடவத்சத்தர பிரதேச செயலக பிரிவில் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை வீட்டுக்குவீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ஆயிரத்து 754 பயனாளர்களுக்கு 39 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆயிரத்து 600 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொதி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கடுவலை பிரதேச செயலக பிரிவிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஏனைய பகுதிகளிலும் வெற்றிகரமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் நலன்கருதி உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.