இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைய மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் முன்னெடுப்பதற்கு குறித்த செயற்பாடு தடையாக அமையதென இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய அத்தியாவசிய சேவைகளை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்.
இதேவேளை நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலையை கருத்திற்கொண்டு மாவட்டங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலை ஏற்படலாமென இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று பரவலை ஒழிப்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஜனாதிபதி நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எதிர்வரும் 30ம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், ஒன்றுகூடல்கள், நிகழ்வுகளை இரத்துசெய்தல், வர்த்தக நிலையங்களுக்கு செல்லும், தரித்திருக்கும் நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்களை தனிமைப்படுத்தல்; உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஜனாதிபதியினால் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டமை குறி;ப்பிடத்தக்கது.