பிரேசிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரியோ டி ஜெனீரோ நகரிலுள்ள சேரிப் பகுதியில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
200க்கும் மேற்ப்பட்டோர் பொலிசார் சேரிப் பகுதிக்குள் நுழைந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். ரியோ டி ஜெனீரோ வரலாற்றில் நடத்தப்பட்ட மிக கடுமையான சோதனை நடவடிக்கை இதுவாகுமென பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் , மோசடி மற்றும் பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டவர்களே பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பிரேசில் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரேசிலின் முக்கிய நகரங்களில் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான பொலிஸ் நடவடிக்கை தொடருமென பிரேசில் பொலிஸ் பிரதானி அறிவித்துள்ளார்.