fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தீர்மானம்..

ITN News Editor
By ITN News Editor மே 7, 2021 14:37

தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தீர்மானம்..

தெங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க தெங்கு உற்பத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 30ம் திகதி வரை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெங்கு உற்பத்தி அதிகார சபையின் பிரதேச அலுவலகங்கள் அல்லது பிரதேச தெங்கு அபிவிருத்தி அதிகாரியிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

நிவாரண விலையில் தென்னம்பிள்ளைகளை வழங்குதல், தெங்கு தோட்டத்தை பராமரிப்பதற்கான உதவிகளை வழங்குதல் உட்பட பல வகை நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 15 தென்னம்பிள்ளைகள் நிவாரண விலையில் வழங்கப்படும். இதேவேளை மேலும் பல நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தெங்கு உற்பத்தி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2021 14:37

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar198.50202.99
USA
Pound273.27282.08
UK
Euro233.75242.34
EU
Yen1.791.86
Japan
Yuan30.2331.50
China
Dollar144.54150.86
Australia
CountryCurrencyRate
Dinar530.50
Dinar665.11
Riyal519.49
Riyal54.37
Riyal53.31
Dirham54.44