நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 931 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 151 நோயாளர்கள் நேற்று பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 634 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.