fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் புதுடில்லி நகரில் வைத்தியசாலைகளில் கடும் ஒட்சிசன் பற்றாக்குறை..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2021 11:55

இந்தியாவின் புதுடில்லி நகரில் வைத்தியசாலைகளில் கடும் ஒட்சிசன் பற்றாக்குறை..

இந்தியாவின் புதுடில்லி நகரில் உள்ள வைத்தியசாலைகள் கடும் ஒட்சிசன் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் டில்லி நகரில் உள்ள வைத்தியசாலைகளின் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளர்களினால் நிரம்பியுள்ளமையையடுத்து ஒட்சிசனின் அளவு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. ஒட்சிசனை விநியோகிப்பதற்காக புறப்பட்ட முதலாவது புகையிரதம் ஏழு பெட்டிகளுடன் விஷாக்க பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினத்திலும் 3 இலட்சத்துக்கும் கூடிய தொற்றாளர்கள் இந்தியாவில் பதிவாகினர். அவ்வெண்ணிக்கை 3 இலட்சத்து 30 ஆயிரத்து 503 ஆகும்.

கொரோனா முதலாவது அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இந்தியா சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில் பொது மக்கள் காட்டிய அசமந்த போக்கே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உலகம் பூராகவும் உள்ள நாடுகள் கொரோனா தொற்றினால் பெரும் பாதிப்புக்களுக்குட்பட்ட நிலையிலும் கூட மில்லியன் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நாட்டில் நடாத்திய சமய நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் இந்நிலைமைக்கு காரணமாக அமைந்ததாகவும் அறிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்போது பரவி வரும் வீரியம் அடைந்துள்ள வைரஸ் வகை இந்தியாவில் தீவிரமடைந்து வருகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 23, 2021 11:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க