பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 40 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கலந்துரையாடல் மூலமாக மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இரண்டு நாட்கள் மாநாடு இடம்பெறவுள்ளது. இன்றைய மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி விசேட உரையாற்றவுள்ளார்.
உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்வரும் 2030ம் ஆண்டில் பருவநிலை இலக்கை அடைய வேண்டுமென்ற தலைப்பில் இந்திய பிரதமர் உரை நிகழ்த்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை பருவநிலை மாற்றம், வளி மாசடைவை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான நிதியுதவி, தூய எரிசக்தி சார் தொழிநுட்ப கண்டுப்பிடிப்புக்கள் தொடர்பிலும் உலக தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்கவுள்ளனர். மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை உச்சி மாநாட்டில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.