சித்திரை வருட பிறப்பின் பௌத்த சம்பிரதாய புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் வைக்கும் அரச நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று நடை பெறுகின்றது.
இந்த நிகழ்வு பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவில் இன்று காலை 7.16ற்கு இடம்பெறுகின்றது.
புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்விற்கு அமைவாக, நாட்டு மக்களின் சுற்றாடல் பாதுகாப்பு நலன் கருதி மூலிகை மரக்கன்றுகளை நாட்டுமாறு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.