fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நடிகர் விவேக் காலமானார்..

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2021 09:22

நடிகர் விவேக் காலமானார்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2021 09:22

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Skip to content