புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டவிரோத மதுபானம் நஞ்சாகியதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று வெலிமட பிரசேதத்தில் மதுபானம் அருந்தியதானல் ஏற்பட்ட முறுகல் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலென்பிந்துனுவௌ பனிகாரமடுவ பிரதேசத்தின் சிலர் மதுபான விருந்;து உபசாரம் ஒன்றை நடத்தினர். சட்டவிரோதமான மதுபானத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விருந்தோம்பலில் மூவரின் நிலைமை மோசமடைந்ததனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மற்றையவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிட்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் வெலிமட நுவரெலியா வீதிக்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வாய்த்தகராறின் போது குறித்த நபர் கூடிய ஆயுதத்தினால் தாக்கியதனால் உயிரிழந்துள்ளார். கொலை செய்தவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் சீசீரிவி கமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.