நாட்டின் சகல பகுதிகளையும் உள்ளடக்கியவாறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் 45 கிராம சேவகர் பிரிவுகளில் வீடற்ற 45 குடும்பங்களுக்காக நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதன்கீழ் நிர்மாணிக்கப்பட்ட 5 வீடுகள் குறித்த குடும்பங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தலைமையில் இடம்பெற்றது.
000
நீர்பாசன சுபீட்சம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாணத்த்pல் மத்திய மற்றும் சிறிய அளவிலான குளக்கட்டுக்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாத்தான்டிய, தப்போவ மற்றும் கட்டுல்லம்ப குளக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையில் இடம்பெற்றன. பா.உ அஷோக் பிரியந்தவும் இதன்போது இணைந்ததுடன், 2 திட்டங்களுக்கு என 23 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
000
88 இலட்சம் ரூபா செலவில் விவசாய திணைக்களம் நிர்மாணித்த வெலிமட உணவகம் மக்களிடம் கையளிக்கப்பட்டது. பா.உ சுதர்ஷன தெனிபிடிய தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. பதுளை, நுவரெலியா மற்றும் பண்டாரவளை பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்நாட்டு உணவுகளை பெற்று கொள்ள முடியும்.
000
வென்னப்புவ பிரதேச சபை நிதியத்தின் கீழ் 180 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெல்லவ லிஹிரியாகம வாராந்த சந்தை கட்டட தொகுதி இராஜாங்க அமைச்சர் அநுந்திக்க பெர்ணான்டோ தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.