பண்டிகைக் காலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில் பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது குறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும்.
புதுவருட கொண்டாட்டங்களின் போது குழுவாக கூடுவதனால், சுகாதார மற்றும் பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும்