பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று முதல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்காவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்தாகியுள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்து அந்த வெற்றிடத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குபட்டியலில் அடுத்த இடத்திலுள்ள அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.
சபாநாயகர் :
“சட்டரீதியாக நான் இதனை அறிவிக்க விரும்புகின்றேன். யாப்பிற்கு ஏற்ற வகையில் 1981 முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் 64 யில் 1 சரத்தின் படி பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதுபற்றி அறிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் லியோ சில்வஸ்டர் ராமநாயக்க அரசியல் அமைப்பின் 66 ஆ பிரிவின் படி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்பதால் 9 வது பாராளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.”