கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்..
Related Articles
கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துகளை பெற்றுக்கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. தரமான கல்வி கட்டமைப்பை உருவாக்குவதற்கென தேசிய கல்வி சீர்திருத்த கட்டமைப்பை உருவாக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டிஜிட்டல் தளத்தை உருவாக்கும் நோக்கில் பொதுமக்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் பெறவுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கல்வியமைச்சின் www.moe.gov.lk எனும் உத்தியோபூர்வ இணைய பக்கத்திற்கு சென்று கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பதிவுசெய்யமுடியும்.