அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தையடுத்து கெபிட்டல் கட்டட தொகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் காரில் வருகை தந்த நபர் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலுள்ள கெபிட்டல் கட்டட தொகுதிக்கு முன்னால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது செலுத்தியுள்ளார். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார். மற்றைய பொலிஸ் அதிகாரி கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் காரில் வருகை தந்த நபர் கெபிட்டல் கட்டட தொகுதிக்கு முன்னால் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீதே வாகனத்தை செலுத்த்pயுள்ளதாக தெரியவந்துள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகளையும் விபத்துக்குள்ளாக்கி பின்னர் மோட்டார் காரின் சாரதி கத்தியுடன் வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஏனைய அதிகாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த காயங்களுக்கு உட்பட்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்தார். இதனை பயங்கரவாத தாக்குதல் என நேரடியாக கூற முடியாதுள்ளதாக அமெரிக்க கெபிட்;டல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மோட்டார் காரை பொலிஸ் அதிகாரிகள் மீது செலுத்த்pய 25 வயதுடைய நோவா கிறீன் எனும் கருப்பின இளைஞர் ஆவார்.
இந்த தாக்குதலுக்கு முன்னர் இவர் தனது சமூக வலைத்தளம் ஊடாக தான் தொழிலை இழந்துள்ளதுடன், தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அத்துடன் தான் ஃபரக்கான் எனும் இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் உறுப்பினர் எனவும் அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்க பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சம்பவம்; தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உதவியாளர்கள் கடந்த ஜனவரி 6ஆம் திகதி இக்கட்டட தொகுதிக்குள் ஊடுறுவி பதற்ற நிலையை உருவாக்கியதன் காரணமாக அமெரிக்க பாராளுமன்ற கட்டட தொகுதி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.