உயிர்த்த ஞாயிறு நாளை அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்கென நாடு பூராகவும் உள்ள சகல கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
கிறிஸ்துவ மக்களினால் உணர்வுபூர்வமாக உயிர்த்த ஞாயிறு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. யேசு கிறிஸ்த்து நாதர் மரணத்தின் பின்னர் மீண்டும் பிறந்த உயிர்தெழும் ஞாயிறு நாளை கொண்டாடப்படுகின்றது. ஏசு கிறிஸ்த்து நாதர் சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளிக்கிழமை நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட 3 நாட்களின் பின்னர் ஏசுகிறிஸ்த்து நாதர் உயிர்த்தெழுந்த ஞாயிறு நாளையாகும். இதனையொட்டி நாடெங்கிலுமுள்ள அனைத்து தேவாலயங்களிம் விசேட வழிபாடுகள் இடம்பெற்றவுள்ளன. யேசு கிறிஸ்த்து நாதர் உயிர்த்தெழுந்தன் மூலம் அவர் தேவனின் புதல்வர் என உறுதிப்படுத்தப்பட்டதாக கத்தோலிக்க மக்கள் நம்புகின்றனர்.
சகல கிறிஸ்துவ ஆலயங்களுக்கும் பூரண பாதுகாப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 40 ஆயிரம் பொலிஸாரும் முப்படையினரும் இதற்கென ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.