சர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவையென விளையாட்டுத்துறை யமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் சார்புடைய நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய கிராம மட்டம், பாடசாலை என பல்வேறு வகையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விளையாட்டு துறையின் ஊடாக திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர்கள் இனங்காணப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வை வழங்க கூடிய வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன் ஊடாக எதிர்காலத்தில் தொழிற்துறைசார் அறிவுடைய இளைஞர்கள் தொழிற்துறையில் இணைக்கப்படுவார்களென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.