fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“தேசத்துக்கு ஒளி” வேலைத்திட்டமானது வெற்றிகரமாக முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2021 11:16

“தேசத்துக்கு ஒளி” வேலைத்திட்டமானது வெற்றிகரமாக முன்னெடுப்பு

தேசத்துக்கு ஒளி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு சமுர்த்தி குடும்பங்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டமானது தற்போது வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.

தேசத்துக்கு ஒளி வேலைத்திட்டத்தின் கீழ் மின்னேரியா தேர்தல் தொகுதியின் எலஹெர மற்றும் ஹிங்குரக்கொட பகுதிகளில் உள்ள 410 சமுர்த்தி குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பொலன்னறுவை மாவட்டத்தில் மின்சாரம் இன்றி உள்ள சகல சமுர்த்தி குடும்பங்களுக்கும் துரிதமாக மின்சாரத்தை பெற்று கொடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் கருவெலகஸ்வௌ பிரதேச செயலக பிரிவின் மின்சாரம் இன்றி உள்ள சமுர்த்தி குடும்பங்களுக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையில் மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டன. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இப் பிரதேச செயலக பிரிவில் உள்ள மின்சாரம் இன்றி காணப்படுகின்ற சகல சமுர்த்த்p குடும்;பங்களுக்கும் மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 2, 2021 11:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க