அஸிதிஸி வர்த்தக கண்காட்சி’ என்ற தலைப்பில் கண்காட்சி எதிர்வரும் 08, 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.
அத்வெலா என்று பெயரிடப்பட்ட இத்திட்டம், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான தொழில்நுட்ப ஆதரவு, சந்தை அறிமுகங்கள், உற்பத்தி பொருளின் பெயர் மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்துகின்றது.
கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்ட கொழும்பு வர்த்தக சங்கம் மற்றும் ஸ்கைஹிப் ஆகியவற்றின் தொழில்நுட்ப ஆதரவுடன் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் முழு ஆதரவோடு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் சீ பீ ஏ வெகுமதி அட்டை ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் ஆலோசனைக்கு அமைய, இந்த அட்டை எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் உள்ள சுமார் 7,000 ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.