நாட்டில் அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெறும் மாதமாக ஏப்ரல் மாதம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஏப்ரல் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் பதிவாகுமென அவர் குறிப்பிட்டார்.
இதனால் வீதி பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.