கடந்த ஐந்து மாதங்களின் பின்னர் நேற்றைய தினம் குறைந்தளவிலான கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர். 139 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து நாள் ஒன்றில் 200க்கும் குறைந்த தொற்றாளர்கள் பதிவாகிய முதல் சந்தர்ப்பமாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.
மொத்தமாக இதுவரை 92 ஆயிரத்து 442 தொற்றாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 886 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தொற்றாளர்களில் 89 ஆயிரத்து 90 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொவிட் -19 வைரஸ் தாக்கத்தோடு தொடர்புடைய 566 மரணங்கள் பதிவாகியுள்ளன.