கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் உலக பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் அமெரிக்கா, 1.9 டொலர்கள் பெறுமதியான நிவாரண பொதிகளை வழங்கியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் க்ரிஸ்டேலினா ஜோர்ஜீவா தெரிவித்தள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் பொருளாதார துறையில் இலாபம் ஈட்டுதலை குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 5.5 சதவீத இலாபமீட்டலை விட அதிக வளர்ச்சியை இவ்வருடத்தில் உலக பொருளாதாரம் உயர்த்துமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் 16 ட்ரில்லியன் டொலர்கள் வரை கொவிட் தடுப்பூசிகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் க்ரிஸ்;டேலினா ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடத்தில் பாரிய சரிவை எதிர்க்கொண்டிருந்த உலக பொருளாதாரம் தற்போது விரைவாக பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் பொருளாதார இயந்திரமாக அமெரிக்காவும் சீனாவும், மிகப்பெறும் பொருளாதாரத்தைக்கொண்டு செயற்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை வளர்ந்து வரும் சந்தை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் என்பன நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திட்டமிடல்களை மேற்கொண்டு செயற்பட்டு வருவதாகவும் வேறு துறைகள் குறித்து அவர்களின் கவனம் திரும்பியுள்ளதாகவும் க்ரிஸ்டேலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.