fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றாடலுக்கு ஏதுவான பேனையை தயாரித்த பாடசாலை மாணவி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2021 10:58

சுற்றாடலுக்கு ஏதுவான பேனையை தயாரித்த பாடசாலை மாணவி

புதுவிதமாக சிந்தித்தால் இவ்வுலகத்தை மாற்றக்கூடிய புத்தாக்கங்களை உருவாக்க எமக்கு முடியும். முழு உலகிற்கும் முன்னுதாரணமாக சுற்றாடலுக்கு ஏதுவான பேனையை தயாரித்த பாடசாலை மாணவி தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்தது. அவர் கண்டி புஷ்பதான மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சச்சினி கிறிஸ்டினா என்பவர் ஆவார்.

சச்சினி கிறிஸ்டினா தயாரித்த இப்பேனையின் மிக விசேட தன்மையானது இப்பேனையை பயன்படுத்தி முடிந்த பிறகு அதனை விதைக்கவும் முடியும் என்பதாகும். நாளுக்கு நாள் சுற்றாடலில் குவியும் பிளாஸ்டிக்கின் அளவை குறைத்து கொண்டு சுற்றாடலுக்கு மரக்கன்றுகளையும் தரக்கூடிய தயாரிப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

 மாணவி சச்சினி கிறிஸ்டினா :

“நானும் எனது தந்தையும் இணைந்து, சுற்றாடலுக்கு ஏதுவான பேனையை தயாரித்துள்ளோம். இந்த பேனையின் விசேட தன்மை குறித்து பேசினால், இந்த பேனை நூற்றுக்கு 96 வீதம் சுற்றாடலுக்கு ஏதுவானது. சுற்றாடலில் சேறும் பிளாஸ்டிக்கின் அளவை குறைப்பதே எமது முக்க்pய நோக்கமாக இருந்தது. நாம் இந்த பேனை தயாரிப்பில் மரக்கறி விதைகள், பலசரக்கு பொருட்களின் விதைகள், பூக்களின் விதைகள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளோம். அதனால் இந்த பேனையை பயன்படுத்திய பின்னர் அதனை பயிரிட முடியுமென்று கூறுகின்றோம். தற்போது இதற்கான பேர்ட்டன் உரிமை காத்திருப்பு பட்டியலிலேயே உள்ளது.”

சச்சினிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இதில் கலந்து கொண்டார்.
எனக்கு தெரிந்த அளவில் உலகில் முதல் முறையாக இவ்வாறான ஒரு விடயம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று எமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சுற்றாடலில் சேறுவதாகும். பாடசாலைகளில் மாத்த்pரம் நாள் ஒன்றுக்கு 60 முதல் 80 கிலோ கிராம் பயன்படுத்தப்பட்ட பேனைகள் குப்பைகளாக அகற்றப்படுகின்றன. நாம் அந்த பாடசாலைக்கும் இந்த தந்தைக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம். பாடசாலை பராயத்தில் இம்மாணவி இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பை நாட்டுக்கு வழங்கியது மிக முக்கிய ஒரு விடயமாகும்.”

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2021 10:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க