தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதனால் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். சுகாதாரப் பிரிவு, முப்படையினர் மற்றும் பொலிசாரும் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் காணல் மற்றும் அது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டல் போன்றன இவ்வேலைத் திட்டத்தின்போது மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த வருடத்திற்குள் மாத்திரம் 4000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.