தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை உருவாக்கும் பதார்த்தம் காணப்படுவதாக பரிசோதனையில் உறுதி
Related Articles
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் விஷத்தன்மையுடையவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
4 நிறுவனங்கள் இறக்குமதி செய்த தேங்காய் எண்ணெயில் எபலடொக்சின் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் பதார்த்தம் உள்ளதாக சுகாதார அமைச்சு மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது. இதன் உண்மை நிலையை உறுதிப்படுத்துவதற்கு இரண்டாம் கட்ட பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக ஒரு நிறுவனத்தின் தேங்காய் எண்ணெயில் இவ்வாறு புற்றுநோயை உருவாக்கும் பதார்த்தம் காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காய் எண்ணெய் தொகையை மீள் ஏற்றுமதி செய்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.