கொலொன்ன வெலேவத்துகொட திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற இரு இளைஞர்கள் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று மதியம் திகனவெல நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற நிலையில் நீரில் முழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்டநேர தேடலின் பின்னர் இருவரினதும் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 17 வயதான கொடக்கவெல பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கொலொன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற இரு இளைஞர்கள் நீரில் முழ்கி பலி
படிக்க 0 நிமிடங்கள்