தொலைகாட்சி தாய்வீட்டின் விருது பட்டியலில் மற்றுமொரு மிக முக்கிய விருதை சேர்த்து சுயாதீன தொலைகாட்சியின் அட்டபட்டம உலக சாதனையில் இணைந்துள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் ஜனரஞ்சகமான நிழ்ச்சிக்கான விருதை பெற்று கொண்டது.
15வது ஸ்லிம் நில்சன் மக்கள் விருது விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் இடம்பெற்றது. சுயாதீன தொலைகாட்சி சேவையின் அட்டபட்டம நிகழ்ச்சி இம்முறையும் மக்களின் பேரபினமானத்திற்குரிய நிகழ்ச்சியாக விருது பெற்றது. இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் கலாநிதி ஹசந்த ஹெட்டியாராச்சி இவ்விருதை தொடர்ச்சியாக 13வது முறையாக வென்று உலக சாதனைப் படைத்தார்.
ஜனரஞ்சகமான 5 நிகழ்ச்சிகளுக்குள் கலாநிதி ஹசந்த ஹெட்டியாராச்சியின் தயாரிப்பிலான தொரமடலாவ நிகழ்ச்சியும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சிறந்த நிகழ்ச்சி மற்றும் ஜனரஞ்சக நிகழ்ச்சியாக அவரின் தயாரிப்பில் உருவான நிகழ்ச்சி விருது பெற்றது. சிறந்த தொகுப்பாளராகவும் ஹசந்த ஹெட்டியாராச்சி இதற்கு முன்னர் விருதுகளை வென்றுள்ளார்.
தற்போது கலாநிதி ஹசந்த ஹெட்டியாராச்சி சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். இம்முறை ஸ்லிம் நில்சன் விருது விழாவில் ஜனரஞ்சக நடிகருக்கான விருது ஹேமால் ரணசிங்கவிற்கு கிடைத்ததோடு மாலினி பொன்சேகா ஜனரஞ்சக நடிகையாக விருது பெற்றார். இதேவேளை இளைஞர்கள் மத்தியில் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளோடு அவர்களின் அபிமானத்தை பெற்ற தொலைகாட்சி அலைவரிசைக்கான விருதுக்கு வசந்தம் ரிவியும் இம்முறை பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/D_AN-_6T5bA”]