நாளைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. அமரபுர மகா நிக்காயவின் உயர் பீட மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் நடைப்பெறவுள்ளமையினால் துக்க தினம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொட்டுகொட தம்மாவாச தேரர் கடந்த 22ம் திகதி காலமானார். 88 வயதான அவர் பௌத்த தர்மத்தின் மேம்பாட்டுக்காக பல்வேறு அர்பணிப்புக்களையும் மேற்கொண்டுள்ளார்.