fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2021 15:41

‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..

‘தலைவி’ என்ற திரைப்பட டிரெய்லர் நாயகி கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளான இன்று,  வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2021 15:41

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Skip to content