இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நா ள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி நோர்த் சவுண்டில் நேற்று ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 169 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. லஹிரு திரிமான்ன 70 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் ஐந்து விக்கட்டுக்களையும், கெமர் ரோச் 5 விக்கட்டுக்களையம் கைப்பற்றினர். அதற்கமைய தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 13 ஓட்டங்களை பெற்றுள்ளது. க்ரெக் ப்ரத்வெயிட் மற்றும் ஜோன் கெம்ப்பெல் ஆகியோர் களத்திலுள்ளனர்.
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று..
படிக்க 0 நிமிடங்கள்