கொரோனா தொற்றினால் நேற்றைய தினம் ஒருவர் மரணித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில மரணமடைந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த உயிரிழப்புடன் நாட்டில் இதுவரை 546 பேர் கொவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளனர். இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 342 தொற்றாளர்களுடன் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 200 ஆக உயர்வடைந்தள்ளது.
அவர்களில் 86 ஆயித்து 759 பேர் குணமடைந்துள்ளனர். இரண்டாயிரத்து 542 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதோடு, 305 பேர் நோய்த்தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.