இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய நிதி மோசடியாக மத்திய வங்கி பிணைமுறி மோசடி கருதப்படுகிறது. இந்த மோசடியின் அடிப்படை சூத்திரதாரியாகவுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் அவருக்கு பிரஜாயுரிமை உள்ள சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர 3 வது தடவையாகவும் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக சட்டமாக அதிபர் மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தார்.
2015 ம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தில் திறைசேரியின் பிணைமுறிகளை தவறாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 3 வது தடவையாகவும் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக சட்;டமா அதிபர் சார்பில் மேல் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாலிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர் குழு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் 10 வது பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அஜஹான் கார்திய புஞ்சிஹேவா என்பவர் மலேசியாவில் வசித்து வருவதாக தகவல்;கள் கிடைத்துள்ள்மையினால் அவருக்கான அழைப்பாணை அங்கிருக்கும் இலங்கை தூதரகம் ஊடக வழங்குமாறு மேல் நீதிமன்றம் உத்த்ரவிட்டது. இதேநேரம் பிணைமுறி சம்பவம் தொடர்பாக சட்டத்தை முன்னெடுப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகின.