கொரோனா வைரஸ் முழு உலகையும் ஆட்கொண்ட நிலையில் எமது நாட்டிலும் அது பரவ ஆரம்பித்தது முதல் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு தனது ஊடகப் பணியை தொடர கடுகளவேனும் பின்னிற்கவில்லை. அது தனது பணியை அச்சொட்டாக முன்னெடுத்ததை இந்த நாட்டு மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள் என்பது எமது திடமான நம்பிக்கையாகும்.
அந்த ஊடகப் பணியை நாம் மக்களுக்காக சரியாகவும் உண்மையாகவும் முன்னெடுப்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டோம். வேறு எந்தவொரு ஊடக நிறுவனத்தில் அல்லது ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது நாம் அவர்களை சிரமத்திற்கு உட்படுத்தும் வகையிலோ இதன் ஊடாக பயன்பெறும் வகையிலோ எமது செயற்பாடுகளை ஒருபோதும் முன்னெடுக்கவில்லை. எனினும் சில சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை நோக்கும் போது விரக்தி ஏற்படுகிறது.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு உண்மையான தகவல்களை நேர்மையாகவும் பொறுப்புடனும் வழங்க தவறவில்லை. எமது செய்தி ஒளிபரப்புக்கள் மட்டுமன்றி கொரோனா அனர்த்தத்திற்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கலைஞர்களுக்கு நாம் வழங்கிய எமது சமூகப் பணி அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டதை மறந்துவிட முடியாது.
கொரோனா வைரஸ் ஒரு நபருக்கோ, ஒரு குழுவுக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ வரையறுக்கப்பட்ட் ஒன்றல்ல, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் எவரையும் தாக்கக்கூடிய ஒரு பயங்கர வைரசாக அது மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் எமது ஊழியர்கள் மட்டுமன்றி எம்மோடு தொடர்புபடும் அனைவரதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பரவலான சுகாதார வேலைத்திட்டங்களை கொரோனா தொற்று ஆரம்பம் முதல் நாம்; பின்பற்றி வருகின்றோம். அதற்கென முறையான ஆலோசனைகளையும் பெற்றுள்ளோம்.
இந்நிலையில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பை கொரோனா தொற்று காரணமாக நடத்திச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ள சில சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் செய்திகள் குறித்து ஒரு பொறுப்புவாய்ந்த ஊடகம் என்ற வகையில் உண்மையான விடயங்களை கூறாமலும் இருக்கமுடியாது.
இன்றைய தினம் சுயாதீன தொலைக்காட்சி வளவில் எமது அலுவல்கள் இடம்பெறும் விதத்தை நீங்கள் பார்க்கின்றீர்கள். சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் சுதத் ரோஹண உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களும் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு அதி உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது எவரும் அறிந்த உண்மையாகும்.
கடந்த காலங்களில் வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லப்பட்டிருந்த சுயாதீன தொலைக்காட்ச்p ஊடக வலையமைப்பு இன்று அதியுயர் நிலைமைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த பயணத்தை சீர் குலைப்பதற்கு எவர் முயற்சித்தாலும் அது எவ்விதத்திலும் நிறைவேறாத ஒரு கனவு மட்டுமே என்பதை பொறுப்புடன் கூறி வைக்கவிரும்புகின்றோம். காய்க்கும் கரத்திற்கு கல்லெறிவார்கள் என்பது போன்று நாளுக்கு நாள் ரசிகர்கள் பேரமிமானத்தை பெற்று முதலாம் தரத்திற்கு வந்துள்ள எமது பயணத்தை தடுப்பதற்கு எவரேனும் முயற்சித்தால், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைமைப்பின் மீது பற்று வைத்துள்ள அனைத்து ஊழியர்களும் நாட்டிலுள்ள அனைத்து ரசிகர்களுடன் எமது பயணத்தை மக்களுக்காக நாம் தொடர்வோம் என்பதை உறுதியாக கூறிவைக்க விரும்புகிறோம்.